யாருக்கு ஆதரவு? முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டம் நாளை கூடுகிறது

-வீரகேசரி

கிழக்கு மாகாண சபையில் யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு நாளை செவ்வாய்க்கிமை கூடுகிறது.

அரசாங்கம் மும்மொழியும் முதலமைச்சருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப்போவதில்லை. கிழக்கில் ஆட்சியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் இற்கே வழங்கியுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னரான் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கில் யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள உயர்மட்ட உறுப்பினர்களின் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment