கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்காக நடைபெற்று முடிந்த தேர்தலில் சுமார் 12 இலட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்யவில்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு இந்த மூன்று மாகாணங்க ளுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வருடம் வாக்களிக்காதவர் களின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது.
2008ஆம் ஆண்டு தேர்தலில் 10 இலட்சத்து 26ஆயிரம் பேர் வாக்களித்திருக்காத நிலையில், இம்முறை தேர்தலில் சுமார் 12 இலட்ச ம்பேர் வாக்களிக்கவில்லை.
வடமத்திய மாகாணத்தில் 3 இலட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்களும், கிழக்கு மாகாண சபையில் 3 இலட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்கத் தவறியுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு வடமத்திய மாகாணத்தில் 2 இலட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 4 இலட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்களும், கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்களும் வாக்களித்திருக்கவில்லை.
அதேநேரம், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை மூன்று மாகாண சபைகளிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இம்முறை தேர்தலில் ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப் பட்டன. எனினும் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
-தினகரன்
Leave a comment