கிழக்கு மாகாண சபை: 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 08 சிங்களவர்கள் தெரிவு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 08 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தலா 04 உறுப்பினர்களும் என 15 முஸ்லிம் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 02 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 07 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 03 உறுப்பினர்களும் என 12 தமிழ் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 03 உறுப்பினர்களும் என 08 சிங்கள உறுப்பினர்களும் இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 07 முஸ்லிம் உறுப்பினர்களும், 04 சிங்கள உறுப்பினர்களும், ஒரு தமிழ் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரும், 03 சிங்கள உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியலிருந்து 11 தமிழ் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 07 முஸ்லிம் உறுப்பினர்களும், தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து ஒரு சிங்கள உறுப்பினரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 10 சிங்கள உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும், அநுராதபுர மாவட்டத்திலிருந்து 19 சிங்கள உறுப் பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 22 சிங்கள உறுப்பி னர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும், ஒரு தமிழ் உறுப்பினரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 15 சிங்கள உறுப் பினர்களும், 02 முஸ்லிம் உறுப்பினர்களும், ஒரு தமிழ் உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

மூன்று மாகாண சபைகளிலும் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன் னணி ஆகிய 06 பிரதான அரசியற் கட்சி களிலிருந்தே மேற்படி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– தினகரன்

Published by

Leave a comment