-MMS
கிழக்குமாகாணசபைக்கான தேர்தலில் காத்தான்குடி மக்கள் ஆரவத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று அதிகாலை தொழுகையிலிருந்தே ஊர் வாக்களிப்புக்குத் தயாராகி இருந்தது. வாக்குச்சாவடிகளில் மேலதிக பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் ஆண்களின் 50 வீதமான வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
ஹிஸ்புல்லாஹ், சிப்லி, முபீன், சல்மா அமீர் ஹம்சா, அப்துர் ரஹ்மான் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் தங்களது வாக்கை நேர காலத்தோடு வாக்களிப்பு நிலையம் சென்று அளித்திருந்தனர்.
மௌலவி அப்துர் ரவூப் ஆதரவு தரப்புக்கள் நேரகாலத்தோடு வாக்குளிக்கும் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இதுவரைக்கும் காத்தான்குடியில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. ஆள் மாறாட்டங்களைத் தடுப்பதில் பலத்த நடைமுறைகள் வாக்குச் சாவடிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நண்பகலிற்குப் பின்னர் பெண்களின் வாக்குகள் அதிகமாக அளிக்கப்ட இருக்கின்றன.
Leave a comment