கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்கு வாக்காளர்களை நேரத்துக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள், வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்லவேண்டும். தங்கள் ஆளடையாளங்களை உறுதிப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது கிராமசேவகர் ஊடாகப் பெற்றுக்கொண்ட தற்காலிக அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்று மாகாண சபைகளுக்கும் 108 உறுப் பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 3073 பேர் போட்டி யிடுகின்றனர். இத்தேர் தல்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நேற் றையதினம் பூர்த்தியடைந் திருப்பதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப் புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாகத் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரே ஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார். தேர் தல் பாதுகாப்புக் கடமையில் 21 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளதுடன், ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவையேற்படும் பட்சத்தில் மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளனர். இங்குள்ள 37 தேர்தல் தொகுதிகளில் 4247 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் 35 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குழறுபடிகள் நடைபெறும் வாக்குச் சாவடிகளின் தேர்தல்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவுகள் பூர்த்தியடைந்ததும், பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணியளவில் வெளியிட எதிர்பார்த்திருப்ப தாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப் பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் தேர்தல் திணைக்களத்தின் http://www.slலீlலீணீtions.gov.lk என்ற இணையத்தளம் வழியாக உடனுக்குடன் வெளியிட ப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாகத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment