அரங்கேறும் காடைத்தனமும் இறங்கும் ஈமானும்!

-MMS

தேர்தல் மேடைகளில் முழங்கிய குர்ஆனும் ஹதீஸூம் வீசி எறியப்பட்டு தற்பொழுது காத்தான்குடி ஆளும் கட்சியினர் காரடத்தனங்களில் ஈடுபட்டடிருக்கின்றனர். மேல் இடத்தின் தயவுகளால் தட்டிக் கேட்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அல்லாஹ்வை மாத்திரம் பயந்து இவ்வூரில் செயற்படும் ஏனைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் இன்று காலையிலிருந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற காடைத்தனத்தில் இவ்வாறான கட்டவிழ்ப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் மிஹ்லார், ஐ.தே.க. வேட்பாளர் முபாரக் மற்றும் ஆதரவாளர்கள் இன்று தாக்கப்பட்டனர்.

இந்தக் காடைத்தனங்கள் இஸ்லாமிய ஊரில் எவ்வாறான மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டுவரப்போகின்றது என பொதுமக்கள் தற்பொழுது சிந்தித்து வருகின்றனர்.

தற்பொழுது இத்தரப்பினரால் கள்ளவோட்டு வேட்டைகள் கட்சிதமாக இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

Published by

Leave a comment