மூன்று மாகாண சபைகளுக்கும் நாளை தேர்தல்: 3336417பேர் வாக்களிக்க தகுதி

108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி!

கிழக்கு சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். நாளை காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை ,திருகோணமலை, மட்டக்களப்பு ,திகாமடுல்ல ,இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து இன்று 07 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்படும்.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் இன்று முதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பிப்பர்.

மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, நேற்று 06ஆம் திகதி முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.

வாக்குச் சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவ ரெனவும் அவர் குறிப்பிட்டார். மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலுக்குமென 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.

கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர். மேலும் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இவர்களில் உள்ளடக்கப்படுவரெனவும் அவர் கூறினார்.

பொலிஸார் வாக்குச்சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுப்பர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது-

இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை அமைதியான சூழலே காணப்படுவதாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைதியினை குழப்ப முயற்சித்தால் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதியானதும் அமைதியானதுமான முறையில் நாளைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை 08 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை மறுநாள் 09ஆம் திகதி காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் கூறினார்.

வாக்குகள் 236 நிலையங்களில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுககு பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பாளர்களுக்கு பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

நாளை காலை 7மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை ,மட்டக்களப்பு ,திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து இன்று 07 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்படும்.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் இன்று முதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பிப்பர்.

மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை நேற்று 06 ஆம் திகதி முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.

வாக்குச் சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் குறிப்பிட்டார். மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலுக்குமென 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.

கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர். மேலும் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இவர்களில் உள்ளடக்கப்படுவரெனவும் அவர் கூறினார்.

பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுப்பர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது- இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடினார்.

இதுவரை அமைதியான சூழலே காணப்படுவதாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைதியினை குழப்ப முயற்சித்தால் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதியானதும் அமைதியானதுமான முறையில் நாளைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை 08ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை மறுநாள் 09 ஆம் திகதி காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் கூறினார்.

வாக்குகள் 236 நிலையங்களில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுககு பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பாளர்களுக்கு பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment