துண்டுபிரசுரம் விநியோகித்தவர்கள் கைது

காத்தான்குடியில் இன்று வெள்ளக்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகித்த இருவரை காத்தான்குடி கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் அமைப்பொன்றினால் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

‘பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எழுதப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களும் எமது தொடர்ச்சியான அழைப்புக்களும்’ என தலைப்பிட்ட இந்த துண்டு பிரசுரத்தை பள்ளிவாயலில் வைத்து விநியோகித்துக் கொண்டிருந்த போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களுக்கும் மேற்படி அமைப்பின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் துண்டுப்பிரசுரத்தை கைப்பற்றியதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி விசாரணை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Tamilmirror/ Pics F/B

 

 

 

Published by

Leave a comment