காத்தான்குடி தேர்தல் களம்….

– விஷேட ஊடுறுவல்

எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமை கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தல் மேடைகள் தற்பொழு ஓய்ந்து போயிருந்தாலும் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் குறையவில்லை!

காத்தான்குடியில் குறிப்பாக 1988ற்குப் பின்னர் முஸ்லிம் தலைமைத்துவக் கட்சிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. அதற்கு முன்னர் பெரும்பான்மை கட்சிகளோடு சேர்ந்து அல்லது சுயேட்சையாக எமது வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை வரலாறு (பார்க்க எமது அரசியல் பக்கம்).

தற்பொழுது அரசாங்கத்துடன் இணைந்து பொ.ஐ.முன்னணியை ஆதரித்து வெற்றிலை சின்னத்தில் ஹிஸ்புல்லாஹ் தரப்பும், காத்தான்குடியின் பிரதான எதிர்க்கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுயேட்சைக்குழு 8 எனும் இரட்டைக் கொடி சின்னத்திலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் உத்தியோகபூர்வ மரச்சின்னத்திலும் வேட்பாளராக காத்தான்குடியில் களமிறங்கி இருக்கின்றன.

2004ம் ஆண்டிற்குப் பின்னர் காத்தான்குடியில் ஐ.தே.க யின் செல்வாக்குகள் குறைந்திருந்தன. இன்றும் இக்கட்சிக்கான ஆதரவுக்கரங்கள் எழவில்லை. எனவே ஐ.தே.க. காத்தான்குடியில் செல்வாக்குச் செலுத்தாது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஆரம்ப காலமுதல் தமிழ் தலைவர்கள் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்ததால் பற்பல சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்து வந்தனர். உதாரணமாக அரசாங்க வேலை வாய்ப்பு, உரிமைகள், கல்வி, விவசாயம், காணி போன்ற மிகப்பெரிய சேவையினை செய்ததனால் இன்றும் அம்மக்கள் பரம்பரை பரம்பரையாக அவற்றின் நன்மைகளைப் பெற்று வருகின்றனர். இதனால் மட்டக்களப்பில் அன்று முதல் இன்றுவரைக்கும் ஐ.தே.கட்சிக்கும் குறிப்பிட் ஆதரவுகள் இருப்பதை மறக்கமுடியாது.

1988ல் இருந்து அரசியலுக்கு அறிமுகமான காத்தான்குடியின் மகன் என வர்ணிக்கப்படும் சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுமார் 25 வருடகாலங்கள் அரசியல் மரத்தில் வேறூன்றி இருப்பவர். அன்று முதல் இன்றுவரை அவரது சேவைக்காக மாத்திரமன்றி ஏதோ ஓர் அபிப்பிராயத்திற்காக அவரை ஆதரிக்கும் சுமார் 3000 வாக்காளர்கள் அவருக்கு காத்தான்குடியில் இருக்கின்றனர். இதைவிட கட்சிகளின் கூட்டு, நிறுத்தப்படும் வேட்பாளரினரது ஆதரவுகள், தேர்தல் பிரச்சாரம், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புக்கள் என்று தேர்தலுக்கு முன்வரை சில ஆயிரம் ஆதரவுகள் அவருக்கு அண்மைக்காலத்தில் கிடைத்திருந்ததை ஏற்க முடியும்.

காத்தான்குடியின் தற்போதைய பதிவு செய்யப்பட்ட வாக்குகள் சுமார் 27,000 இருக்கின்றன. இவற்றுள் ஏழாயிரம் கழித்தே பார்க்க வேண்டும். மரணித்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று இந்த ஏழாயிரம் வாக்குகள் இல்லாமல் போகும். மேலும் செல்லுபடியற்ற வாக்குகளும் வழமை போல் இதற்குள் உள்ளடக்கப்படலாம்.
சுமார் 20,000 வாக்குகளுக்கு நாம் கணிப்பிடவேண்டி இருக்கின்றது. அப்துர் ரவூப் மௌலவி அவர்களது தரப்பில் சுமார் 3000 வாக்குகள் இருக்கின்றன. ஹிஸ்புல்லலாஹ் தரப்பில் நிச்சயமான ஐயாயிரம் வாக்குகள் இருப்பதாக ஊடுறுவல் மூலம் தெரியவந்தது. எனவே அப்துர் ரவூப் மௌலவி அவர்களது வாக்குகளையும் சேர்த்து பார்க்கும் போது சுமார் 8000 வாக்குகள் ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு அடிப்படையாகக் கிடைக்கக் கூடியவை.

இரண்டாவது பெரும்பாண்மையை நோக்கும் போது நல்லாட்சிக்காக மக்கள் இயக்கத்தின் ஆதரவுக் கரங்கள். கடந்த கால தேர்தல்களை கணிப்பிட்டுப்பார்க்கும போது சமார் 7000 வாக்குகளை எட்டும் அளவுக்கு ஓர் பாரிய வளர்ச்சியை எட்டி இருக்கின்றது. சமார் 6 வருடகால அரசியல் ஈடுபாட்டால் கூட்டு முயற்சியில் உருவான இவ்வியக்கத்திற்கு இவ்வாக்குப்பலம் ஓர் சாதனையாகும்.

தான் சிந்தித்து தனது விருப்பில் இணைந்தவர்களே இவ்வியக்கத்துக் ஆதரவு வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஹிஸ்புல்லாஹ்வின போக்கில் அதிருப்பியடைந்தவர்கள், இளைஞர்கள், படித்தவர்கள், சிந்தனைப் போக்குள்ளவர்கள் மற்றும் பிரதானமாக தௌஹீத் அமைப்புக்களைச் சேர்ந்த சகோதரர்களும் இவ்வியக்கத்தினை ஆதரிப்பதால் வாக்கு வங்கியில்  மாற்றம் இருக்காது. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அப்துல் ரவூப் மௌலவியுடன் தேர்தல்களில் கூட்டுச் சேர்வதால் சுமார் ஐயாயிரம் வாக்குகளை பொதுத்தரப்புக்களிடமிருந்து அண்மைக்காலம் வரை இழந்து வருவது யதார்த்தம்.
மூன்றாவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் விருட்சமாக வளர்ந்து வருகின்றது. முபீன் சேர் அவர்களுக்கென்று இருக்கும் சுமார் 2000 வாக்காளர்களும், சல்மா அமீர் ஹம்சா அவர்களுக்கு இருக்கும் சமார் 2000 வாக்காளர்களும், மர்சூக் அகமட் லெவ்வை அவர்களுக்கு இருக்கும் குறிப்பிட முடியாத சில வாக்குகளாலும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று 3வது பலத்தை பெற்றிருக்கின்றது. இதற்கிடையில் இவர்களின் கூட்டுடன் அஸாட் சாலியும் இணைந்திருக்கின்றார்.

1988-89 காலப்பகுதியில் டெலோவில் வாக்குக் கேட்டவர்களும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் இல் இணைந்திருக்கின்றனர். எனினும் முஸ்லிம்காங்கிரஸ் இன் ஆதரவுகள் எத்தனை வாக்குகள் என்பதை கணிப்பிட்டுக்கூற முடியாமல் இருக்கின்றன. ஏனெனில் சல்மா ஹம்சா மற்றும் முபீன் சேர் ஆகியோர்களுக்கிடையில் இருக்கும் 4000 வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்படுமானால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் 4000 வாக்குகளைத் தொட்டு மீண்டும் ஓர் அரசியல் சக்தியை உருவாக்கி சரித்திரம் படைக்கும்.

எனவே ஹிஸ்புல்லாஹ் தரப்பு 8000 வாக்குகள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 7000 வாக்குகள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4000 வாக்குகள் என சாராம்சமாகக் கூறலாம். இவற்றுள் 19000 வாக்குகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

மீதமுள்ள 1000 வாக்குகள் தளம்பல் வாக்குகளாகும். இவர்கள் இறுதிவரை முடிவெடுக்காமல் இருப்பவர்கள். இறுதி நேர தேர்தல் பிரசாரங்களாலும், துண்டுப்பிரசரங்களாலும் கவரப்பட்டு இறுதியாக எவருக்காவது வாக்களித்துவிட்டுப் போவோம் என நினைப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் சுமார் 3000 பேர்கள் வரை இருப்பதாக தற்பொழுது தெரியவருகிறது.

நாம் ஏற்கனவே கழித்த 7000 வாக்குகள் ஊருக்குள் இருக்கின்றன. ஆனால் உரியவர்கள் ஊரிலோ, நாட்டிலோ, இந்த உலகத்திலோ இல்லாமல் இருப்பர். இப்படிப்பட்ட வாக்குகளை குறைந்தது 5000 யைப் பெற்று கள்ளவாக்குகள் அளிக்கப்படுவது இதுவரை நடந்துவந்த தெட்டத்தெளிவான உண்மை. இந்த ஐயாயிரம் கள்ள வாக்குகள்தான் காத்தான்குடி தேர்தல் வெற்றியை இறுதியில் தீர்மானிக்கும் பலமிக்க துரும்பாக செயற்பட்டு வருவது வெளிப்படை.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திலிருந்து ஒரு வாக்கும் எதிர்தரப்புக்குப் போகாது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல் இருந்தும் ஒரு வாக்கும் எதிர்தரப்புக்குப் போகாது. இப்படி இருக்கையில் எப்படி ஓர் கட்சி 13000 வாக்குகளைப் பெறப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

அப்துர்ரவூப் மௌலவி அவர்கள் 100 வீதம் வாக்காளர்களைப் பயன்படுத்தினால் ஆளும் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. இதே போல் தளம்பல் வாக்குகளும் தேர்தல் முடிவுகளை மாற்றும்.

‘நீதியே எங்கள் நெறி’ என கடந்த தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய சகோதரர் ஜெஸீம் அவர்களுக்கு எக்கச்சக்கமான கள்ள வோட்டுக்கள அப்துர் ரவூப் மௌலவி தரப்பால் அளிக்கப்பட்டிருந்ததை கண்முன்னால் பலர் கண்டனர். இவ்வாறுவாக்களித்த பலர் பெண்கள்கூட முஹ்சீன் மௌலான வாக்குச் சாவடி மற்றும் இரும்புத்தைக்கா வாக்குச் சாவடிகளில் பிடிபட்டு நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கள்ளவோட்டின் களஞ்சியம் எனக் கருதப்படும் மெத்தைப்பள்ளி வாக்குச் சாவடி, மில்லத் மகளிர் வாக்குச்சாவடி கள் குறிப்பிடத்தக்கது. முன்னர் போல் தற்போதைய காலமில்லை என்பதை வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். இணையத்தளம் வந்ததன் பின்னர் ஒவ்வொருவரும் ஊடகவியலாளர் போலவே செயற்படுகின்றனர. எனவே ஒரு தவரைச் செய்தால் மறுகனமே தவறுகளும், சம்பந்தபப்பட்டவர்களும் புகைப்படங்களுடன் இணையங்களில் பதிவேற்றப்படும் ஓர் வேகமான உலகத்தில் நாம் இன்று இருப்பதை மறக்க வேண்டாம். சார்பு ஊடகங்கள் மறைத்தாலும் மழுப்பினாலும் அவை முகநூலிலும் ஏனைய இணையங்களிலும் வெளிப்படையாக வெளிவரும் என்பதை கள்ள வாக்களர்களும், தேர்தல் வண்முறையாளர்களும் சிந்தித்து அவதானமாக இருக்கவேண்டும்.

எனவே கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டு தேர்தல் முடிவு வந்தால் நாம் குறிப்பிட்ட விபரங்களில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பெரும்பான்மை தரப்பு மேலதிக வாக்குகளால் முன்னிலை பெறாலம். அவை 12000 ஆக எட்டலாம் என ஊடறுத்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார்!

குறிப்பு: எதிர்வு கூறல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை. உண்மையை அறிந்தவன் இறைவன். அவனுக்கே சர்வ வல்லமையும் கணிப்பும் இருக்கின்றது. இது எமது இணையத்தளத்தின் ஊடறுத்து அறிந்த தகவல்கள். பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். நாங்கள் குறிப்பிட்டிருந்தது தற்போதைய கள நிலவரமே! எனவே தேர்தல் முடிவு மாற்றமாகவே இருக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரிந்த உண்மை.

வெற்றி பெறுபவர்களுக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

 

 

 

Published by

Leave a comment