லண்டன் ஒலிம்பிக் அரங்கிலும் அதனைச் சூழவுள்ள விளையாட்டு மைதானங்களிலும் தற்பொழுது ‘பராலிம்பிக்’ எனப்படும் வலது குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.![2012-london-paralympics-day-6-20120904-142618-453[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/2012-london-paralympics-day-6-20120904-142618-4531.jpg?w=530&h=353)
ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிரித்தாணிய மக்கள் கொடுத்த ஆர்வத்தைப் பார்க்கிலும், இப்போட்டிகளுக்கு முக்கியத்துவமளித்து வருகின்றனர். தனது அங்கக் குறைவினால் தான் ஒரு மனிதனல்ல என்ற உணர்வுகளுக்கு அப்பால், தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை அங்கக் குறைவுள்ள உலக வீரர்கள் தற்பொழுது நிரூபித்து வருகின்றனர்.
இப்போட்டிகளைக் கண்டு இரசிப்பதிலும் வீரர்களுக்கு ஆர்வமூட்டுவதிலும் பிரித்தாணியர்கள் உட்பட அந்நாட்டின் பிரதமர், அரச குடும்பத்தினர், பிரபல வீரர்கள் என தினமும் பங்கெடுத்து வருகின்றமை ஓர் விசேட அம்சமாகும்.
மிகச்சிறமப்பட்டு தனது அங்கவீனத்தைப் பொருட்படுத்தாமல் கலந்து சிறப்பிக்கும் இவ் உத்தம வீரர்களின் ஒவ்வொரு போட்டிக்கும் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று மரியாதை செய்து அவர்களுக்கு, உட்சாகமளித்து வருகின்றமை கண்கொள்ளாக் காட்சியாகும். இவர்களின் மறைந்து கிடக்கும் திறமையையும் சிரமத்தையும் உணரும் இரசிகர்களின் கண்கள் குளமாகிச் செல்வதையும் காணமுடிகிறது.


![pistoriushas[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/pistoriushas1.jpg?w=512&h=369)
![paralympics[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/paralympics1.jpg?w=530&h=397)
Leave a comment