நான்கு திசையிலும் கடலால் சூழப்பட்டிருக்கும் இலங்கை நல்ல மண் வளம் பெற்ற நாடாக விளங்குவதனால் எவ்வளவுதான் வரட்சி ஏற்பட்டாலும், எங்கள் நாட்டில் நெல் விளைச்சல் திருப் திகரமான அளவுக்கு இருக்கிறது. இந்தத் தடவை வரட்சியினால் நெற் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும் இன்றும் கூட நாம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுள்ளோம்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இலங்கையை சூழ்ந்துள்ள ஆழ்கடல் மீன் வளம்மிக்க பிரதேசமாக இருக்கின்றது. வெளிநாட்டு மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்வளத்தை சூறையாடி செல்கின்ற போதிலும், நாம் பெருமளவு மீனை உற்பத்தி செய்து, எங்கள் நாட்டு மக்களுக்கு நியாய விலைக்கு இந்த போஷாக்குணவை பெற்றுக் கொடுக்கிறோம்.
மலையகத்திலும் கரையோரப் பிரதேசத்திலும் காசுப் பயிர்ச் செய்கைகளான தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்தி இன்றும் திருப்திகரமாக இருந்து வருகின்றது. இலங்கை தொடர்ந்தும் உலக நாடுகளுக்கு தேயிலையை யும், இறப்பரையும் ஏற்றுமதி செய்து பெருமளவு வெளிநாட்டு செலாவ ணியை தேசியப் பொருளாதாரத்தைப் வளப்படுத்துவதற்கு பெற்றுக் கொடுக்கின்றது. அதே வேளையில் தேங்காய் உற்பத்தியும் நாட்டில் பன் மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தென்னம்பிள்ளை என்ற அடிப்படையில் அவற்றை இலவசமாக விநியோகிப்பதனால் இன்று தென்னை மரங்கள் நாட்டில் திரும்பிய இடமெல்லாம் காட்சியளிக்கின் றன. தேங்காய், உள்ளூர் மக்களின் சமையலுக்கு பிரதான உணவாக அமைவதுடன் அதன் மூலம் தேங்காய் எண்ணெய்யையும் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இலங்கையின் வெளிநாட்டு செலாவணியை பெருமளவு சம்பாதித்துக் கொடு க்கும் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்கள் சிறந்த முறையில் நிறை வேற்றிக் கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றம், வரட்சி, வெளிநா ட்டு சந்தை வாய்ப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களினால் இவற்றின் ஏற் றுமதியில் சற்று வீழ்ச்சி காணப்பட்டாலும் எங்கள் நாட்டின் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்கள் இன்னும் வெளிநாட்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
நம் நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் உதிரத்தை வியர்வையாக வெளியேற்றி கடுமையாக உழை த்து மாதா மாதம் அங்கிருந்து வெளிநாட்டு செலாவணியை அனுப்பி வைப்பதன் மூலம் எங்கள் தாய் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளே நாட்டுக்கு தேவையான ஆகக்கூடுதலான வெளி நாட்டு செலாவணியை பெற்றுக் கொடுக்கும் சாதனையை ஏற்படுத்தியுள் ளார்கள். அத்துடன் ஆடைத் தயாரிப்பு தொழிலும் நல்ல வெளிநாட்டு வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கிறது.
இன்றைய நவீன உலகில் இவை அனைத்தையும் வெற்றி கொள்ளக்கூடிய வகையில் உல்லாசப் பயணத்துறை வீறுநடை போட்டுக் கொண்டிருக்கி றது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று இலங்கையின் நீலக்கடற் கரையில் நீந்தி விளையாடியும், வெயிலில் காய்ந்தும் பொழுதை இரம் மியமாக போக்குவதில் ஆர்வம் கொண்டுள்ள வெளிநாட்டவர்களின் வருகை இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு நாடு பொருளா தாரத் துறையில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் அந்த நாட்டில் வெறுமனே ஹோட்டல்களும், கட்டிடங்களும் இருந்தால் போதாது. வெளி நாட்டவர்கள் விரும்பிய நேரத்தில் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் ஒரு நொடிப்பொழுதில் செல்வதற்கு வசதியான சிறந்த நெடுஞ்சாலைகள் இருப்பது அவசியம். அந்தப் பணியை அரசாங்கம் இப்போது சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் ஒரே நாளில் பல சீதோஷ்ண நிலைகளை ஒருவர் அனுபவிக் கலாம். தென்னிலங்கையில் இடையிடையே மழை பெய்யும் காலநிலை யும் அதையடுத்துள்ள மத்துகமை, இரத்தினபுரி பிரதேசங்களில் ஓரளவு குளிர்மையான காலநிலையும் பின்னர் கொழும்பில் இருந்து சுமார் 4 மணித்தியாலங்கள் வாகனத்தில் சென்றடையக்கூடிய இலங்கையின் இங் கிலாந்து என்றழைக்கப்படும் மலை உச்சியில் அமைந்திருக்கும் நுவரெ லியாவும் இருக்கின்றது.
இங்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் பெரும்பாலானோர் ஜப் பான், ஜேர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, லத்தின் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங் கள் நாட்டில் சிரேஷ்ட அரசியல்வாதிகளாக, கல்விமான்களாக, வர்த்தகப் பிரமுகர்களாக இருப்பதனால் அவர்களுக்கு ஐந்தாறு நாட்கள் மாத்தி ரமே இலங்கையில் தங்கியிருந்து தங்கள் குறுகிய கால விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஐந்தாறு நாட்களில் வாகனம் மூலம் இலங்கை முழுவதையும் சென்று பார் ப்பது கடினமான காரியமாகும். இதனை உணர்ந்து அரசாங்கம் இந்த வெளி நாட்டு உல்லாசப் பயணிகள் விமானம் மூலம் நாட்டின் நாலா பக்கங்க ளுக்கும் ஓரிரு மணித்தியாலங்களில் சென்று பார்த்து திரும்புவதற்கு வாய்ப்பளிப்பதற்காக உள்ளூரில் சிவில் விமான நிலையங்களை சீர மைத்து வருகின்றது.
மட்டக்களப்பில் உள்ள இராணுவ விமான நிலையத்தை 820 மில்லியன் ரூபா செலவில் ஒரு நவீன விமான நிலையமாக மாற்றும் திட்டத்திற் கான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த திங்களன்று ஆரம்பித்து வைத்தார். இதன் விமான ஓடு தரை 3,500 அடி நீளமாகும்.
இது போன்று அரசாங்கம் புத்தளம், இரத்மலானை, கொக்கலை, சீகிரிய, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை ஆகிய பிரதேசங்களிலும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை விஸ்தரித் தல் அல்லது புதிய விமான நிலையங்களை அடுத்த ஐந்தாண்டுகளுக் குள் செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அரசாங்கம் எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளினால் எங்கள் தேசம் விரை வில் உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறிவிடும்.
–தினகரன்
Leave a comment