மதவாத துண்டுப்பிரசுரங்களில் அவதானம் தேவை!

-MJ
நாம் முன்னர் குறிப்பிட்டிருந்ததுபோல் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்நாட்டின் பேரினவாதிகளில் குறிப்பிட்ட சில மதவாதக் குழுக்களால் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அறிந்தவிடயம்.

இந்தவகையில் நாட்டின் சில பகுதிகளில் பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கான தடங்கல்களும் ஏற்பட்டு வந்தன.

இன்று இணையத்தளங்களில் இவ்வாறான குழுக்களால் முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு, பெரும்பான்மை இனத்தை திசைதிருப்பும் படங்களை வரைந்து அவற்றை இணையத்தளங்களில் வலம் வரச் செய்திருக்கின்றனர்.

இது ஒன்றும் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை! ஏனெனில் முஸ்லிம்களில் புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களிலிலும் உணவகங்களிலும் பெரும்பான்மை இனத்தவர்களே கூடுதலாக பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். பல வருடங்கள் புகழ்பெற்று விளங்கும் இவ்வாறான முஸ்லிம் வியாபார நிறுவனங்களை இலக்குவைத்தாலும் மக்கள் தரத்தையும் நேர்மையையும் நம்புவதாலும் தரமான பொருட்களை மலிவு அல்லது கழிவு விலையில் கொள்வனவு செய்ய முடிவதாலும் நுகர்வோர்களை திசைதிருப்ப முடியாது.

பல்லாயிரக்கணக்கான பேரின இனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மேற்படி முஸ்லிம் நிறுவனங்களில் உயர் நிலை தொடக்கம் கீழ் நிலை வரை வேலைசெய்து வருகின்றனர். எனவே திட்டமிட்டு செயற்படும் இவ்வாறான விசமிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை வெல்லம்பிட்டி பள்ளிவாயல் மீது ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு அப்பகுதி பேரின மக்கள் ஆதரவளிக்கவில்லை. ஏனெனில் பரம்பரை பரம்பரையாக இன உரவோடு அங்கு பல்லின சமூகங்களும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஒரு சில மதவாதக் குழுக்களே தற்பொழுது தீவிரமாக இயங்கிவருவது அவதானிக்கத்தக்கது.

எனவே இவ்வாறான மதவாத துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள், போஸ்டர்கள் ஒன்றிணைந்து வாழும் பல்லினங்களுக்கிடையே மனக்கசப்புக்களைத் தோற்றுவிக்கும். எனவே இது பற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.

முகநூலில் இவ்வாறான படங்களை அந்நிய சகோதரர்கள் பிரசுரிக்கும்போது ஆரோக்கியமான கருத்தக்களை வழங்கி அவர்களைத் திருத்த முடியும். இவ்வாறான முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதைத்தடுப்பதற்கு அன்மைக்காலமாக இலங்கையில் பேரின பிரதேசங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment