-MJ
உலக தலைசிறந்த கழங்களுள் ஒன்றாகவும் இங்கிலாந்தின் கனவு அணியாகவும் திகழும் மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளர் சேர் அலக்ஸ் பேர்கிஸன் நேற்று இடம்பெற்ற சவ்த்தம்டன் அணிக்கு எதிரான போட்டியில் தனது முகாமைத்துவ காலத்தின் 1000 போட்டிகளைக் கடந்த ஓர் சிறந்த பயிற்சியாளரும் முகாமையாளரும் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகின்றார்.
பிரித்தாணிய கழகங்களின் முகாமையாளர்களுள் அதிக வெற்றி வாய்ப்புக்குரிய பயிற்சியாளர் என கருதப்படும் சேர் அலக்ஸ் பேர்கிஸன் 1986ஆம் ஆண்டிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு முகாமையாளராக இருந்து வருகின்றார்.
இவரது காலத்தில் 12 பிரிமியர் லீக் வெற்றிகளையும், 5 எப்.ஏ கிண்ண வெற்றிகளையும், 4 லீக் கிண்ண வெற்றிகளையும் மற்றும் இரு ஐரோப்பா கிண்ண வெற்றிகளையும் மன்செஸ்டர் யுனைட்டட் பெற்று சரித்திரம் படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
19 முறை பிரிமியர் லீக் வெற்றிகளைப் பெற்று லிவர்பூல் அணியுடன் சம நிலையில் யுனைட்ட் இருக்கின்றது. தனது முகாமைத்துவத்தால் சிறந்த வீரர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி புகழ் சேர்த்திருக்கின்றார். இந்தவகையில் டேவிட் பெக்காம், ரூணி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
599 போட்டிகளில் வெற்றியும், 233 போட்டிகள் சமநிலையிலும், 168 போட்டிகள் தோல்வியிலும் சந்தித்த அலக்ஸ் பேர்கிஸன், 1863 கோல்களை நேரடியாக பார்த்திருக்கின்றார்.
71 வயதுடன் அனுபவ முதிர்ச்சியுடன் இருக்கும் சேர் அலக்ஸ் பேர்கிஸன் இம்முறைக்கான பிரிமியர் லீக் யை வெற்றிபெற்று 20வது தடவையாக வெற்றிபெற்ற அணியாக சரித்திரம் படைத்துவிட்டு, தான் ஓய்வு பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment