பிரதியமைச்சரின் தந்திரமும் … பாக்கீரின் நாடகமும்…

A.L.M. இஸ்மத்

வெள்ளிக்கிழமையன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி பின்னர் இறங்கிச் சென்ற பாக்கீர் ஆசிரியர் தாக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை தற்பொழுது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும், பாக்கிர் ஆசிரியரும் தெரிவித்து வருகின்றமை வேடிக்கையான ஒரு விடயமாகும்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பகிரங்கமாக ஏற்பாடு செய்திருந்த அழிவுச் சத்தியத்துக்கு வராமல் ஓடி ஒளிந்த பிரதியமைச்சரின் நரித்தனத்தையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் ஜூம்ஆ தொழுகைக்காகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புரிந்து கொண்டு, பிரதியமைச்சரின் இக்கேவலமான பொய்க் குற்றச்சாட்டுக்களை விமர்சித்திருந்தனர்.

தனக்கு ஏற்பட்ட இவ் அவமானத்தையும் உண்மைகளையும் மக்களிடமிருந்து திசைதிருப்ப பிரதியமைச்சரின் மூளையில் உதித்த சிந்தனையே பாக்கீர் அவர்களின் நாடகமாகும். இதனால் தனது கூலியாக செயற்படும் பாக்கீர் ஆசிரியர் அவரை ஓர் நாடகம் நடிக்கும்படி ஏவப்பட்டதால் உசாரான பாக்கீர், பலத்த ஏமாற்றத்துடன் மேடையிலிருந்து இறங்கி, தனக்கான ஒரு இரங்கள், அனுதாபங்களை கட்டவிழ்த்தி அப்பாவி மக்களை திசைதிருப்ப அரங்கேற்றிய ஓர் மேடை நாடகமே இதுவாகும்.

தனது பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கொடுக்க பிரதியமைச்சருக்கு முடியாது! இதனால் தனது ஆதரவுக்கும் தனது எதிராளிகளை பழிசுமத்தவும் தனது கூலிகளை ஏவி அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவதிலும், செயற்படுவதிலும் பிரதியமைச்சருக்கு நிகர் பிரதியமைச்சரே!

உண்மையை நன்கு அறிந்தவன் அல்லாஹ். பல்லாயிரக்கணக்கான கண்சாட்சிகள், புகைப்படக்கருவி சாட்சிகள் இருந்தும் யாருமே இல்லாத தனியான இடத்தில் தாக்கப்பட்டதாக பொய் கூறி இருக்கின்றனர். தான்னால் மேற்கொள்ளப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்ட குறித்த பள்ளிவாயல் மோசடி விடயத்தை மறைக்கவும் இப்படியான திட்டங்கள் நாடகமாய் அரங்கேறி வருகின்றன.

 

 

 

Published by

Leave a comment