மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பயணத்தை பின்நோக்கி இட்டுச்செல்ல எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புல்மோட்டையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றியீட்டும் கீழ்த்தரமான முயற்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் நாடு பின்னடைவை சந்திக்குமே தவிர ஒருபோதும் முன்நோக்கிச் செல்லாது.
இலங்கையின் நன்றி மறவா மக்கள் இனி ஒருபோதும் நாட்டை இனவாதிகளுக்கு தாரைவார்க்க மாட்டார்கள்.
பாரம்பரிய காணிகளின் உரிமை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாட்டிற்குள் வதந்திகள் பரப்பப்படுகின்றன. காணிகளின் உரிமையை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![pulmottai-3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/pulmottai-31.jpg?w=530&h=271)
![pulmottai-4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/pulmottai-41.jpg?w=530&h=240)
![pumottai-5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/pumottai-51.jpg?w=530&h=277)
Leave a comment