அனுமதிப்பத்திரம் கிடையாதோர் ‘1911’ உடன் தொடர்பு கொள்ளவும்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக் கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களூடாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் பரீட்சைகள் திணைக்களத்துடன் ‘1911’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ம் திகதியன்று புலமைப்பரிசில் பரீட்சை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் 3 இலட்சத்து 18 ஆயிரத்து 416 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாக பரீட்சை கள் ஆணையாளர் கூறினார்.
சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 490 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 77 ஆயிரத்து 926 மாண வர்களும் பரீட்சை எழுதவுள்ளனர்.
இவர்களுக்கென நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 803 பரீட்சை நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் நிறுவப் பட்டுள்ளன. இப்பரீட்சையினை முன்னிட்டு சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மேற்பார்வை கடமைகளில் ஈடுபடுத்த நியமித்திருப்பதாக வும் அவர் கூறினார்.
மேலும் பரீட்சை நிலையங்களுக்குள் பெற்றோர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் மாணவர்களை அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்த்துவதற்கென இரண்டு ஆசிரியர்கள் மாத்திரம் பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவரெனவும் அவர் குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a comment