அகாஷி- ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

நேற்று இலங்கை வந்த ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி- நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நேற்று (22) பிற்பகல் சந்தித்து உரையாடினார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சரது இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ- ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரியர் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் உட்பட ஜப்பானிய தூதுக்குழுவினரும் பங்குபற்றினர்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment