வட மத்திய கிழக்கு சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பத்துக்கான இறுதி திகதி ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி ஆகஸ்ட் 27 ஆகும். தற்காலிக அட்டைகளை கிராம அபிவிருத்தி மற்றம் தோட்ட அத்தியட்சகர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் .
சாரதி அனுமதி, ஓய்வூதியர் அட்டை ,சமய குருமாருக்கு வழங்கப்படும் அடையாள அட்டை என்பனவும் 2010- 2011 தேர்தல்களுக்காக வழங்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment