நேற்று மாலையிலிருந்து உலகின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டதாக அறியப்படவில்லை. இதனால் உலகில் சூரியன் முதலில் உதித்து முதலில் மறையும் நாடுகளான சீனா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறை தென்பட்டதாக அறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பிறை தென்பட்டதாக இதுவரை அறியப்படவில்லை.
இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் இன்று சனிக்கிழமை ரமழான் மாதத்தின் 30 வது நோன்பை நோற்று முழுமாதத்தினை பூர்த்தி செய்கின்றனர். இதனால் மேற்படி நாடுகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று சனிக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவித்திருக்கின்றது. காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவும் இவ் அறிவிப்பைச் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
![crescent moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/crescent-moon1.jpg?w=119&h=180)
Leave a comment