பொதுமக்கள் மீதான சிரியாவின் விமானத் தாக்குதலில் 30 பேர் பலி!

-MJ

நேற்று சிரியா அரசாங்கப்படையினரின் ஜெட் விமானங்கள், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் நகரமான ‘அஸாஸ்’ மீது பொழியப்பட்ட குண்டு மழைகளால் சிறுவர்கள் உட்பட 30 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நகரம் துருக்கியின் எல்லைக்கருகில் இருக்கின்றது.

இக்குண்டு வீச்சுக்களால் குறைந்தது 10 வீடுகள் அழிக்கப்பட்டும், பலர் காயமடைந்துமிருப்பதாகவும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

அபு உமர் எனும் ஓர் சிவில் பொறியியலாளர் கூறுகையில் ‘சிறுவர்களும் பெண்களும் நோன்பு பிடித்து தூங்கும் போது இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், இப்பகுதி முற்றிலும் பொதுமக்கள் வாழும் ஓர் இடம்’ என்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

 

 

 

Published by

Leave a comment