– அஷ்செய்ஹ் CMM அமானி
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
புனித றமழான் மாதத்தை அடைந்த நாம் நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற நாம் பின்வரும் விடயங்களை கடைப்பிடித்து எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
01. இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் வரையறைகளையும் பேணி பெருநாள் தினத்தை அனுஷ்டிக்குமாறும்,
02. ஆண் பெண் கலப்புக்கள் ஏற்படுவதையும், வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், கண்ணியத்திற்குரிய எமது சகோதரிகள் கண்டிப்பாக இஸ்லாமிய ஆடைகளை அணிந்து வெளியில் செல்லுமாறும்,
03. எதிர்வரும் காலம் தேர்தல் காலமாக காணப்படுவதால் அதனைக் கருத்திற் கொண்டு வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதையும் முஸ்லிம்களாகிய நாம் எமக்கிடையே பிளவு பட்டுக் கொள்வதையும் தவிர்ந்து கொள்ளுமாறும்;
04. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதுடன் எமது செயற்பாடுகள் அனைத்தையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாறக்
தலைவர் – செயலாளர்.
ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி.
17.08.2012.
Leave a comment