இரசாயனவியல் பாடத்தில் முதலாம் பகுதி வினாப்பத்தி ரத்தில் ஆவர்த்தன அட்டவணை வழங்க தேவையில்லை என வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் சிபாரிசுக்கமையவே பரீட்சை திணைக்களம் செயற்பட்டது என பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்றுக்காலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞான பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம்பகுதி வினா பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, இந்த பிரிவில் சிங்கள பாடத்திற்கான வினாப்பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்பட்டுள்ளதாக மாணவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே பரீட்சை ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தமிழ், சிங்கள, ஆங்கில மொழி வினாத்தாளுடனும் ஆவர்த்தன அட்டவணை வழங்கப்படவில்லை என்றார்.
இதேவேளை ஆசிரியர் சங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள பிழைகளுக்கான திருத்தங்கள் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னரேயே உரிய பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பிவைக் கப்பட்டுள்ளன என்றார்.
-தினகரன்
Leave a comment