இலங்கையில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.அம்பாறை அட்டாளைச்சேனைப் பகுதியில் எனது வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வை குழப்புவதற்கு பிரதேச பொலிஸ் உயர் அதிகாரி ஒத்துழைப்பு வழங்கினார். குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார்.
நாம் எவரையும் தாக்கவில்லை. எமது ஆதரவாளர்கள் எந்தவிதமான குழப்பத்திலும் ஈடுபடவில்லை. குறித்த தரப்பினர் தாங்களாகவே, தமது கட்சிக் காரியாலங்களுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இவ்வாறு எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் நாம் முறைப்பாடு செய்துள்ளோம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
-tamilwin
Leave a comment