-MMS
இவ்வருடத்துக்கான க.பொ.த உ-த பரீட்சை ஆரம்பித்த நாள் தொடக்கம் விஞ்ஞான பிரிவுக்கான பாடங்களில் சில தவறுகள் இடம்பெற்று வந்ததை மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்திருந்தனர். இந்தவகையில் இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்தப் பிரிவில் சிங்கள மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பரீட்சை சில அதிருப்திகளை ஏற்படுத்தியிருப்பதாக மாணவர்கள் முறையிட்டுள்ளனர்.
Leave a comment