அட்டாளைச்சேனை சம்வம்: அதாவுல்லாஹ், எஸ்.எஸ்.பி. பின்னணியில்: ஹக்கீம்

-MMS

நேற்று முன்தினம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் கலவரத்திற்குப் பின்னணியில் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் அமபாறை எஸ்.எஸ்.பி பிரேமலால் ரனகல ஆகியோரம் இருப்பதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

நேற்று கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார்.  பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஓர் பொலிஸ் அதிகாரி மேற்படி பொலிஸ் அதிகாரி அதாவுல்லாஹ்வின் கைபொம்பையாக இருப்பதாகவும், எல்லாமே இவர்களால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட அரசியல் காடைத்தனம் எனவும்,  இது முதற்தடவை அல்ல. இது போன்ற சம்பவங்களை தாங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிர்நோக்கி வருவதாகவும் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களிடையே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் காரணமாக பல வாகனங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் தேசமாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment