ரமழான் 27ம் இரவு: இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மக்கா ‘ஹரம் ஷரீப்’ இல்!

-MJ

ரமழான் 27ல் ‘லைலத்துல் கத்ர்’ எனும் அற்புத இரவை எதிர்பார்த்து உலகில் உள்ள முஸ்லீம்கள் ரமழானில் வழமையை விடவும் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட்டுவருவது அறிந்த விடயமாகும்.

இந்த வகையில் மக்கா புனித ஹரம் ஷரீபில் இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நேற்றிரவு (செவ்வாய்) பள்ளிவாயலில் நிறைந்திருந்தனர். அதிகளவான வெளிநாட்டவர்கள் வருகை தந்திருந்ததாகவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவித்திருக்கின்றன. வழமைபோல் இடமில்லாமல் வீதிகளிலும் நடைபாதைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் தொழுகைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் மேலும் தெரிவித்திருக்கின்றது.

தொழுகைக்காக ஹரம் ஷரீப் இற்குள் வந்தவர்கள், அதிகாலை பஜ்ர் தொழுகைவரை நிறைந்திருந்தனர். தறாவீஹ் மற்றும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளிலும் வருடந்தோரும் மக்கள் இங்கு அதிக ஆர்வம் காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment