உயர்மட்ட மாநாடொன்றின் மூலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மொஹிதீன் ஜூம் ஆப் பள்ளிவாசலில் நேற்று திங்களன்று இடம்பெற்ற இன ஐக்கியத்திற்கான ஒன்றுகூடல் நோன்பு திறக்கும் ‘இப்தார்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்- யாழ். மாவட்டத்தில் முன்பொரு காலத்தில் தமிழர்- முஸ்லிம் என்ற எவ்விதமான வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில காலங்கள் கசப்பான காலங்களாக அமைந்திருந்தன.
இப்போது முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்து வாழ்ந்துவரும் நிலையில் அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உயர்மட்ட மாநாடொன்று விரைவில் நடாத்தப்பட்டு அதனூடாக உரிய தீர்வு காணப்படும்.
யாழ். மாநகர சபையின் கலாசார பிரிவினரால் ஒருங்கமைக்கப்பட்ட இன ஐக்கியத்திற்கான இவ்வொன்று கூடல் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்)- யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா- ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்)இ யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோருடன் இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கமும் கலந்துகொண்டனர்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment