5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு மீண்டும் ஒரு தடவை விருது வழங்கும் கொமர்ஷல் வங்கி

கடந்த ஏழு ஆண்டுகளில் வங்கியின் சிறுவர் கணக்கு 24 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளது.

இவ்வாண்டிலும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுள் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைப்பவர்களை மீண்டும் ஒரு முறை கெளரவிக்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

அருணலு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தப் பரீட்சையில் சாதனை படைக்கும் பட்சத்தில் அவர்களின் திறமைக்கு ஏற்ப ரூபா 10,000, 7,500 மற்றும் 5,000 என்ற தொகைகளை பாடசாலைகளில் முதல் மூன்று இடங்களையும் பெறுபவர்களுக்கு பரிசாக வழங்கி வருகின்றது.

இந்தப் பரீட்சையில் அருணலு கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டால் அவரது வங்கிக் கணக்கின் தொகையை ஆகக் கூடியது ரூபா 50,000/= வரை இரட்டிப்பாக்குகின்றது

ம் ஆண்டில் அணப்பரிசு பெற்ற வெற்றியாளர்கள்.

இந்தத் தகுதிகளைப் பெற்றுக்கொண்ட அருணலு கணக்குகளை வைத்திருக்கும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வங்கி கடந்த ஏழு ஆண்டுகளில் 24 மில்லியன் ரூபாவைப் பணப் பரிசிலாக வழங்கியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பின்படி 2012 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

‘சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க.

‘அருணலு திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த சாதனையாளர்களுள் பெரும்பான்மையானவர்கள் பாடசாலைகளிலும் வெளியிலும் தொடர்ந்து தமது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணம் உள்ளனர். இவர்களின் வெற்றியைக் கொண்டாட கிடைத்துள்ளமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது’ என்று அவர் மேலும் கூறினார்.

2011 ஆம் ஆண்டில் அருணலு திட்டத்தின் மூலம் 365 மாணவர்களுக்கு 3.2 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியின் 200 சேவை நிலையங்களில் எந்தவொரு சேவை நிலையத்திலும் அருணலு கணக்குகளைத் திறக்கலாம். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான பரிசைப் பெற்றுக் கொள்ள பரீட்சை நடைபெறும் தினத்தில் குறைந்த பட்சம் ரூபா 5,000/- மீதியை கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

கொமர்ஷல் வங்கி இலங்கையின் தனிப்பெரும் தனியார் வங்கியாகும். உலகளாவிய ரீதியில் ஆயிரம் தலைசிறந்த வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியும் இதுவேயாகும். 14 தடவைகள் தொடர்ந்து இலங்கையின் தலைசிறந்த வங்கியாக ‘குளோபல் பினான்ஸ்’ சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ‘பினான்ஸ் ஏஸியா’ ‘யூரோமணி’ ‘டிரேட் பினான்ஸ்’ ஆகிய சஞ்சிகைகளால் வழங்கப்பட்ட பல விருதுகளையும் வங்கி வென்றுள்ளது.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment