லண்டன் ஒலிம்பிக் 2012: நிறைவு நிகழ்ச்சிகள்

-MJ

கடந்த இரு வாரங்களாக லண்டனில் இடம்பெற்றுவந்த லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது.

லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் அரங்கு நிறைந்த 80,000 இரசிகர்களின் முன்னிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. அதிசக்திவாய்ந்த டிஜிட்டல் தொழிநுட்பத்தைக் கையாண்டு லண்டன் அரங்கை வர்ணஜாலங்களால் அலங்கரித்திருந்தது ஓர் புதிய திருப்பமாக இருந்தது. ப

ச்சை புள்வெளியாக இதுவரை காட்சியளித்த மைதானம் நீல நிறமாகவும், பல்வகையான கலப்பு நிறத்தாலும் மாற்றியமைத்து ஓர் மண்டபமாக மைதானத்தை இறுதி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மாற்றியமைத்து ஓர் மைல்கல்லை ஒலிம்பிக் வரலாற்றில்  நட்டுள்ளனர்.

இப்போட்டிகளை தங்குதடையின்றி வெற்றியாக முடிவுற வழிவகுத்த பல்லாயிரம் தொண்டர்களும் பிரித்தானிய மக்களும் நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டனர். முதலாமிடத்தை அமெரிக்காவும், இரண்டாமிடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை பிரித்தானியாவும் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் ‘ரியோ’ நகரில் 2016 ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற இருக்கின்றது. இவ்வாறான இன்னுமொரு ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்கு இன்னும் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 

 

 

Published by

Leave a comment