மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் மினி சூறாவளி

-MMS

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் பலவீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்சம்பவத்தில் எவரும் காயங்களுக்குட்படுத்தப்பட்டதாக அறியப்படவில்லை.

இதன்காரணமாக ஆனைகட்டியவெளியில் 8வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன் பாலையடிவெட்டையில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் இவ்வாறான மினி சூறாவளி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment