போஸ்டர்- பதாகைகளை அகற்ற 7.3 மில்லியன் ரூபா!

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் போஸ்டர் உள்ளிட்ட தேர்தல் பதாகைகளை அகற்றவென 7.3 மில்லியன் ரூபா பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளததென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென பொலிஸ் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நிதியை வழங்க நடவடிக்கை எடுத்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை- வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை இடம்பெறும் எனவும் விடுமுறை தினமான 26ம் திகதியும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment