சகோதரியின் கவிதைக்குக் கிடைத்த பதிலோ….?
மியான்மார் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு 50 மில்லியன் டொலர் பெறு மானமுள்ள உதவிகளை வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.
மியன்மார் நாட்டில் பங்களாதேஷ் எல்லையையொட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.
ரகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் பங்களாதேஷில் இருந்து குடிபெயர்ந்த, எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மாரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 50 பேர் பலியாகினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் தாயகமான பங்களாதேஷ¤க்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மியான்மாரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன.
இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவூதி அரேபியா கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மார் முஸ்லிம்களுக்கு, 50 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது.
இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மாருக்கு அனுப்ப, சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். மியன்மாரில் சுமார் 800,000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக இன அழிப்பு, கற்பழிப்பு, கட்டாய வெளியேற்றம் போன்ற வன்முறைகள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பி ட்டுள்ளது.
இந் நிலையில் ஜித்தாவில் இன்று ஆரம்பமாகவுள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
-தினகரன் (கட்டுரை)
Leave a comment