அமைச்சர்களுக்கு பம்பலப்பிட்டியில் அரச வீடுகள்!

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு பம்பலப்பிட்டியில் உத்தியோகபூர்வ வீடுகளை வழங்கப்படும் .

அரசாங்கம் இதற்காக பம்பலப்பிட்டியில் 20 மாடிகளைக் கொண்ட வீட்டுத்தொகுதியை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

425 மில்லியன் ரூபாவுக்கு இந்த வீட்டுத்தொகுதியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் வீடுகளை மேலும் புனரமைப்பதற்காகவும் 110 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடுகளைக் கொண்டிராத அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. வாடகை வீடுகளில் வசிக்கும் அமைச்சர்களுக்கு உத்தேச அரச வீட்டுத்தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment