‘எல்லே’ விளையாடி மகிழ்ந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ‘எல்லே’ விளையாடி மகிழ்ந்தார்.

இலங்கை எல்லே சங்கம் மற்றும் கால்டன் ஸ்போட்ஸ் நெட்வர்க் நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 2012ஆம் ஆண்டுக்கான தேசிய எல்லே போட்டியின் இறுதிப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியினைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர். இதன்போது- ஜனாதிபதி எல்லே விளையாடி மகிழ்ந்தார்.
இறுதிப் போட்டிக்கு தெரிவான வீரர்களுக்கு வாழ்த்துக்களையூம் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment