சனிக்கிழமை அதிகாலை ஈரானின் வடமேற்கு மாநிலமான தப்ரீஸ் இல் இடம்பெற்ற இரு பூகம்பங்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. இதுவரைக்கும் 2000க்கும் அதிகமானோர் காயத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
கட்டட இடிபாடுகளுக்குள்ளும் இன்னும் பல உயிர்கள் பொறிவைக்கப்பட்டிருப்பதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெஹ்ரான் அறிவித்திருக்கின்றது.
66 மீட்புப்படைக் குழுக்களும், மோப்பநாய்களைக் கொண்டமைந்த பிரதான 7 குழுக்களும் இம்மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
டிசம்பர் 2003 இல் ஈரானில் ஏற்பட்ட பாரிய பூகம்மபத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டிருந்ததும் ‘பாம்’ நகரம் முற்றாக அழிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment