ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் இதுவரைக்கும் 180 பேர்கள் பலியாகி இருக்கின்றனர். 1300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. முதலாவது பூகம்பம் அதிகாலை 4:53 மணிக்கு 6.4 பரிமாணத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டதாகவும் இரண்டாவது அதிர்வு பதினொறு நிமிடங்களின் பின்னர் 6.3 பரிமாண அளவில் அதிர்ந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளனர். ஈரானின் வடமேற்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.
![120811-quake-hmed-11a.photoblog600[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/120811-quake-hmed-11a-photoblog6001.jpg?w=530&h=354)
Leave a comment