எதிர்வரும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு 2010ஆம் 2011 ஆம் ஆண்டுகளில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். எனினும் அவற்றை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொகமட் நேற்று தெரிவித்தார்.
வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகளை காண்பிப்பது அவசியம். அவ்வாறு எந்தவிதமான அடையாள அட்டைகளும் இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படும். தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும். தேர்தல் நடைபெறும் ஏழு மாவட்டங்களிலும் 2010 ஆம், 2011 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவை புதுப்பிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், புதிதாக தற்காலிக அடையாள அட்டை வழங்கும் நடவடிக் கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அண்மையில் எடுத்த இரண்டு புகைப்பட பிரதிகளுடன் கிராமசேவகர்களிடம் இதற்கான விண்ணப்பப்படிவத்தை கையளிக்க முடியும்.
வாக்காளர்களின் நன்மை கருதி தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் அசங்க ரத்னாயக்க தெரிவித்தார்.
-Thinakaran
Leave a comment