ஏழாவது தடவையாகவும் அலரி மாளிகையில் இப்தார்: ஈரான் காரிஹ் கிராத், பலஸ்தீன தூதுவர் அதான்

ரமழான் நோன்பை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகையில் ‘இப்தார்’ நோன்பு துறக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.

ஏராளமான முஸ்லிம்கள் இந்த ‘இப்தாரில்’ பங்குபற்றினர். ஏழாவது வருடமாக ஜனாதிபதி இந்த ‘இப்தாரை’ நடத்தினார்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம். பீ. மார்கள், உலமாக்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காரி முஹம்மத் ஹஸன் முஅக்கீதீ ‘கிராஅத்’ ஓதினார். இலங்கையிலுள்ள பாலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் எச். அல் அஃதா ‘மஃரிபு’ தொழுகைக்கான அதான் கூறினார்.

நாட்டின் தலைவர் முஸ்லிம்களைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் (2005 ஆண்டு முதல்) இந்த இப்தாரை நடத்தி வருவதை முஸ்லிம்கள் பாராட்டினர்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment