மேற்குலகின் அடிமைசாசனமாய் எழுதப்பட்டு
தன்கைகளுக்கும் விலங்கிட்டு
தலைசாயக்கும் பொம்மைகளாய்
சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கும்
அரபுலகத் தலைமைக்கு
தலைவலியாய் நாங்கள் இருக்கின்றோமோ?
நீங்கள் குரலெழுப்ப
முதுகெழும்பற்றவர்களென்பது எங்களுக்கும் புரிகின்றது.![8192d035-91e0-4c3b-9896-de31399ea156-444x333[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/8192d035-91e0-4c3b-9896-de31399ea156-444x3331.jpg?w=300&h=225)
கனவனையும், பச்சிளம் குழந்தைகளையும்
துடிதுடிக்க கொன்றொழித்தனர்.
என் உறவுகளையும் துண்டித்தனர்.
புனித ரமழானோ
ஒரு ஈச்சங்காய்கூட இல்லாமல் செல்கின்றது.. நீங்களோ ஈச்சஞ்சோலைகளில் இருக்கின்றீர்கள்!
எங்கள் கண்ணீரை அணைக்க
துருக்கி மக்கள் கைகொடுத்தனர்.
நாங்கள் உங்களை எதிர்பார்க்கவில்லை
இனிமேலும் எதிர்பாரோம்.
பாராமான எங்கள் சுமைகளை
படைத்தவனிடம் ஒப்படைக்கின்றோம்.
வாழும்போதே மடிந்துவிட்டோம்.
உறவுகளில்லாத வாழ்க்கையில்
உங்களின் ஆதரவுகள் இனிமேல் தேவைப்படாது.
மேற்கிற்கும் பெண்ணுக்கும்
தலைசாய்க்கும் நீங்கள்
எங்களின் வேதனைகளுக்கு
எங்கே குரலெழுப்புவீர்கள்.
பாவம் உங்களை நினைக்கையில்….
வீரமரணத்தையடைந்த என் உறவுகளை
நாளை மறுமையில் சுவர்க்கத்தில்
சந்திப்பதற்காய் காத்திருக்கின்றேன்.
அது போதும்!
நன்றி இறைவா!
நன்றி -நன்றி!
![kimse[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/kimse1.jpg?w=300&h=150)
![Bangladesh%20Denies%20Rohingya%20Muslims%20Entry[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/bangladesh20denies20rohingya20muslims20entry1.jpg?w=300&h=195)
Leave a comment