பிரித்தாணியாவாழ் இலங்கை முஸ்லீம்களுக்கு SLIF விடுக்கும் அறிவித்தல்

-SLIF

பிரித்தாணியாவில் உள்ள ‘சிறிலங்கா இஸ்லாமிய போரம்’ அங்கு வசிக்கும் இலங்கை முஸ்லிம்களிடத்தில், இலங்கையிலுள்ள வரிய குடும்பத்தினர் ஒருவரின் பெருநாள் உணவுக்கான ஸதகாவாக 10 பவுண்ஸ் அன்பளிப்பினை செய்யுமாறு கேட்டிருக்கின்றது.

இலங்கையில் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும், பிறரிடம் கையேந்தி வாழமுடியாமல் பல இலட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் முழுமையான நோன்புப் பெருநாளின் ஒருவேளை பகல் உணவுக்கான நன்கொடையாக குறித்த தொகையினை வழங்கி, அவர்களையும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வழிசமைக்கும் ஓர் நன்மையான நோக்கத்தில் புனித ரமழானில் SLIF அறிவித்திருக்கின்றது.

இதற்கான உரை செய்திகளை (Text Messages) தற்பொழுது SLIF கைத்தொலைபேசிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. இது சம்பந்தமான விபரங்களுக்கு 07900696969 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடனும், மேலதிக விபரங்களுக்கு http://www.slif.org.uk/  இணையத்தளத்தின் ஊடாகவும் தொடர்புகொள்ளும்படி கேட்கப்பட்டிருக்கின்றது.

Published by

Leave a comment