இணையத்தளங்களும் ஏமாற்று வித்தைகளும்…

இவ் ஆக்கம் சமகாலத்தில் இணையத்தளங்களில் இவ்வாறான சிக்கலில் முகம் கொடுத்துவரும் இணையத்தள உபயோகிப்பாளர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.

-MJ

இணையத்தள பயன்பாடுகளுக்கு மத்தியில் இணையத்தள ஏமாற்று வித்தைகளும் இன்று உலகில் பலகோடி மக்களின் வாழ்க்கையில் விளையாடி வருகின்றன.

இவற்றுள் பிரதானமாக இணையத்தள பாவனையாளர்களை தந்திரமாக ஏமாற்றி பணம் பறிக்கும் பல்லாயிரம் இணையத்தளங்கள் இன்று வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

‘உங்களுடடைய மின்னஞ்சல் எமது லொட்டரியில் பல மில்லியன் வெற்றிபெற்றுள்ளது. எனவே குறித்த தொகைகைய நீங்கள் பெறுவதற்கு பின்வரும் விண்ணப்பத்தை நிரப்பி மின்னஞ்சல் செய்யவும்’.

‘அமெரிக்கா கிரீன் கார்ட் லொட்டரியில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். பாராட்டுக்கள். நீங்கள் உங்களுடைய அமெரிக்கா விசாவினை விண்ணப்பிப்பதற்காக குறித்த தொகையை வெஸ்டர்ன் யூனியன் இல் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்’.

இப்படி பல்லாயிரம் தந்திர ஏமாத்து வித்தைகளுடன் ஒவ்வொருவரினரது மின்னஞ்சல் பக்கங்களுக்கும் குறித்த மின்னஞ்சல் பற்பல பெயர், முகவரிகளுடன் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னணியில் எல்லா கள்ள வேலைகளுக்கும் உலகில் எங்கையாவது ஓர் இடத்தில் பாரிய முதலீட்டுடன் ஓர் நிறுவனம் இயங்கி வருகின்றது. இவற்றின் கீழ் பற்பல கிளைகளைக் கொண்டு பல நாடுகளில் மறைமுகமாக இயங்கி வருகின்றன.

‘நீங்கள் 10 மில்லியன் வெற்றிபெற்றுள்ளீர்கள்! இப்பணப்பரிசினைப் பெறுவதற்கும், அதனை பாதுகாப்பாக உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதற்கும் 300 அமெரிக்க டொலர்களை வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பிவையுங்கள்.’

இப்படி வரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களால் மனதுக்குள் பேராசை வந்துவிடும். கற்பனைக் கோட்டைகளை தாங்களே கட்டிக்கொள்வோம். இதேபோல் அமெரிக்கா சிட்டிசனாகிவிட்டோம். இனி பிரச்சினையே இல்லை என மனதுக்குள் எழும் பெருமைக்குள்ளும் கற்பனைக்குள்ளும் தாங்கள் அடிமையாகி விடுவதால் உடனே ஏமாந்துவிடுகிறோம்!

இவவ்வாறான கவர்ச்சியான தகவல்களைப் பெற்று, இன்றுவரைக்கும் பல இலட்சம் பேர் தங்களுது  பணத்தையும் சொத்துக்களையும் இழந்திருக்கின்றனர். வெஸ்டர்ன் யூனியன் பணபரிமாற்றம் என்பது உண்மை நிறுவனம்தானே! எனவே மோசடி இருக்காது என பல்லாயிரம் லொடர்களை அனுப்பிவிட்டு தலையில் மண்ணள்ளிப்போட்டு ஏமாந்து வாழ்வு இழந்து நிற்கும் இணையத்தள உபயோகிப்பாளர்கள் இன்று எத்தனை எத்தனையோ பேர்!! கடன் வாங்கியும், தன்னிடம் வங்கி அட்டை (Credit / Debit Card) இல்லாதவிடத்து அவற்றை இருப்பவரிடம் சென்று கடன் பெற்று குறித்த ஏமாற்று வித்தைகளுக்கு அனுப்பியவர்களும் பல்லாயிரம் பேர்!

எவனாவது ஒரு சதம் சும்மா தருவானா எங்களுக்கு என்று முதலில் யோசிக்க வேண்டும். ஒரு நாளளெல்லாம் வீதியில் நின்று கொண்டிருந்தாலும் ஒரு சதமும் உழைக்க முடியாது. இல்லாவிட்டால் கை நீட்டி பிச்சைதான் எடுக்கவேண்டும். இப்படி சொந்த ஊரிலேயே ஒரு சதமும் சும்மா கிடைக்காத ஒரு காலகட்டத்தில் யார்? எவன்? என்று தெரியாத முகவர்கள் எங்களை அழைத்து அமெரிக்கா விசா தருவதற்கும் அல்லது பல்லாயிரம் அமெரிக்க டொலர்களைத் தருவதற்கும் இவர்கள் யார்?

போலியான அமெரிக்கா முகவர்களின் இணையத்தளங்களில் நாம் எப்போதெல்லாம் கிறீன் கார்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தோமோ அன்றிலிருந்து எமது முகவரிகளும், மின்னஞ்சல் முகவரிகளும் இவர்களின் கனணியில் சேமிக்கப்பட்டிருக்கும். பின்னர் 2 அல்லது 3 வருடங்களுக்குப் பின்னர் உங்களைத் தொடர்பு கொண்டு பணம் கறக்கும் தந்திரபாய நடவடிக்கைகளில் குறித்த போலியான முகவர் நிலையங்கள் அதிக பிரயத்தனப்படும்.

ஒன்றுக்கு மேல் ஒரு மின்னஞ்சல் ஆசைவார்த்தைகளில் உங்களை வந்து சேரும். என்ன செய்வது? மின்னஞ்சலையும் பக்க வடிவையும் பார்க்கும் உண்மையான முகவர் போன்றே தோன்றும். ஓரு பெண் ஏமாந்து தனது கற்பை இழப்பது போல் பல்லாயிரம் பேர் பணங்களை இழந்துவிடுவர். பணம் கிடைத்ததும் உங்களுக்கு குறித்த முகவரிடமிருந்து எந்த தொடர்பும் இருக்காது. அப்படி தொடர்பிருந்தாலும், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி பல மாயவார்த்தைகளால் ‘டாட்டா’ காட்டி இலாவகமாக நழுவியும் விடுவர்.

அமெரிக்கா கிறீன் கார்ட் லொட்டரி உண்மையானது. அவற்றினை ஒவ்வொரு வருடமும் உத்தியோகபூர்வமான அமெரிக்க தூதுவராலய இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும். இதுபற்றி உத்தியோக அறிக்கையையும் அமெரிக்கா வழங்கும். ஒரு சதமும் பணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிப்பது மாத்திரமே எமது வேலை. ஏனைய அணைத்து விடயங்களும் கடதாசி பத்திரங்கள் மூலம் அந்நாட்டு தூதுவராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். லொட்டரியில் வெற்றிபெற்றால் எமக்கு அனுப்பிவைக்கப்படட் கடிதத்துடன் அமெரிக்க தூதுவராலயத்தில் நேர்முகப்பரீட்சைக்காக செல்ல வேண்டும்.

பின்னர் தங்களது விரல் அடையாளம், கடவுச்சீட்டு மேலதிக விபரங்கள் பரீட்சிக்கப்படும். அதுவரைக்கும் ஒரு சதமும் கொடுக்க வேண்டியதில்லை என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்க.

வெஸ்டர்ன் யூனியன் என்பது பணம் பெறுபவரின் பெயர் இருந்தால் போதுமானது. இரகசிய குறியீட்டை மாத்திரமே தாங்கள் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும். குறியீடு தெரிந்தால் யாரும் எங்கும் பணத்தைப் பெறமுடியும்.

அமெரிக்கா விசா விண்ணப்பத்திற்கு ஒரு காலமும் அமெரிக்கா தூதுவராலயம் பணத்தைப் பெறுவதுமில்லை. வெற்றிபெற்றாலும் எல்லா விடயங்களும் பணப்பரிமாற்றலற்ற முற்றிலும் இலவசமான முறையிலேயே இடம் பெறும் என்பதையும் மேலும் ஞாபகப்படுத்திற்கொள்க.

யார்-எவர் எனத் தெரியாக இணையத்தளங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் அல்லது உங்களது வங்கி அட்டைகளின் விபரங்களைக் கொடுத்து ஏமாறுவதிலும் இருந்து தவிர்ந்து கொள்ளவும்.

இதே போல்

‘நல்ல வியாபாரம் காத்திருக்கினறது. எங்களுடன் இணைந்து வியாபாரம் செய்தால் ஒருவருடத்தில் இத்தனை வீதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஓடி ஓடி அலைய வேண்டியதில்லை! வீட்டிலிருந்துகொண்டே பல கோடி உழைக்கலாம்’.

என்றும் பல இணையத்தளங்களும் அவர்களுக்கான போலி முகவர்களும் இருக்கின்றனர். இது சம்பந்தமான மின்னஞ்சல்களும் வரும்.

இதேபோல் சமூக வலைத்தளங்களில் போலியான எதிர்பால் நட்புக்களில் காலத்தையும் நேரத்தையும் இழந்து சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களும் பல மில்லியன்களை இதுவரைக்கும் இழந்திருக்கின்றனர்.

ஓர் பெண்நட்பு போன்று வரும் கள்ளகணக்கு வைத்திருப்பவரால், குறித்த இளைஞனை ஏமாற்றி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் பணம் பெற்று, இது போல் ஒரே கல்லில் பல்லாயிரம் மாங்காய்ககள் எனும் புதிய தத்துவத்திலும் இன்றைய நவீன் உலகில் திட்டமிட்டு தந்திரமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் இணையத்தள டிக்ரி, முதுகலைப்பட்டம் (Distance Online Degree/ Post Graduate) பெற்றுக் கொள்வதற்கும் பல இணையத்தளங்கள் தந்திரமாக செயற்பட்டு வருகின்றன. பல்லாயிரம் அமெரிக்க டொலர்களை தங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் மாத்திரம் குறியாக இருப்பதுடன் அடிக்கடி புதிய கழிவு வீதங்களையும் வழங்கி எப்படியாவது பணம் பறிப்பதில் குறியாக இருப்பார்கள். தேவையானால் தொலைபேசியூடாக தொடர்பும் கொள்வர்.

பணத்தைப் பெற்ற பின்னர் ஒரு டிக்கரி சான்றிதழ் அல்லது முதுகலை பட்டச் சான்றிதழ் தங்களுக்கு தபாலில் அனுப்பி வைப்பார்கள். எனினும் அவை எல்லாமே உத்தியோக பூர்வமற்ற சட்டவிரோதமான அல்லது போலியான பட்டங்களாக இருக்கும் என்பதையும் எமது வாசகர்கள் அவதானமாக இருக்கவும்.

குறித்த போலியான முகவர் நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், அமெரிக்கா கிறீன் கார்ட் லொட்டரி போன்ற போலி முகவர்களின் இணையத்தள முகவரிகளை நோன்பின் இறுதிநேர நல்லமல்களின் நேரத்திற்காக வழங்க முடியாமல் இருப்பதை தெரிவித்துக் கொள்வதுடன் சந்தர்ப்பம் வரும் போது அவற்றினை எமது வாசகர்களின் அவதானத்ற்காக வழங்குவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published by

Leave a comment