நான்கு மாவட்ட வீடமைப்புக்கு நிதி ஒதுக்கீடு!

அம்பாறை -பொலன்னறுவை -திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் சம காலத்திலேயே வீடமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சரவை பேச்சாளாரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இதன்படி இத்திட்டங்களுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 400மில்லியன் ரூபாவும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 100மில்லியன் ரூபாவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment