-MMS
திங்கட்கிழமை ஆரம்பமான க. பொ. த. உயர்தரப் பரீட்சை நேற்றும் வழமை போலவே அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் சுமுகமாக நடைபெற்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இணைந்த கணிதப் பரீட்சை வினாத்தாளில் ஒன்றரை புள்ளிக் கான ஒரு கேள்வி தவறாக வந்திருப்பதாக ஆசிரியர்களும் மாணவர்களும் புகார் செய்துள்ளனர்.
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் இணைந்த கணிதம் வினாத்தாளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு வினா குறித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார வினாத்தாளுக்குப் பொறுப்பான பேராசிரியருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து பரீட்சைகள் ஆணையாளர் குறித்த வினா தொடர்பாக விளக்கமளித்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பேராசிரியரை கேட்டுக் கொண்டுள்ளார். வினாவில் பிழையிருப்பது நிரூபிக்கப் படும் பட்சத்தில் அப்பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் குறித்த வினாவுக்காக ஒன்றரை புள்ளி வழங்கப்ப டுமெனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இணைந்த கணித பாடத்தின் இரண்டாம் பிரிவு வினாப்பத்திரத்திலும் தவறுகள் காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. வினா இலக்கம் 12 தவறாக இருந்ததாகவும் ஆகையால் பரீட்சைகள் திணைக்களம் மாற்று வினாவைக் வழங்கியதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மஹிந்த ஜயசிங்க டெய்லிமிரருக்கு கூறினார்.
இணைந்த கணித பாடத்தின் வினாப்பத்திரம் 1இல் இதேபோன்ற தவறுகள் காணப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. முறைப்பாடுகளை அறிக்கை ஏற்றுக்கொண்டால் அவ்வினாவுக்கு விடையளித்த அனைவருக்கும் பூரண புள்ளிகளை வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்திருந்தார்.
தேர்தல் காலமாகையால் ஏற்கனவே இஸட் புள்ளி விவகாரங்களை அரசியல்வாதிகள் தமக்குச் சார்பாகவும் எதிராகவும் தூக்கிப்பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களின் வாய்க்கு மெல்லுவதற்கு அவல்கிடைத்தது போல் மேலும் இம்முறை இடம்பெற்றுவரும் உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் தவறுகளும் விமர்சிக்கப்படலாம். அராங்கமே தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்!
Leave a comment