ஜனாதிபதி அடுத்த மாதம் மட்டக்களப்புக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு வரும் ஜனாதிபதி மட்டக்களப்பு மாநகர வெபர் விளையாட்டரங்கில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

-வீரகேசரி

Published by

Leave a comment