ரெலிகொம்: 1000 சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

  • ஒரு கோடி 28 இலட்சம் பேரிடம் செல்லிட பேசி
  • 38 இலட்சம் பேரிடம் தொலைபேசிகள் 

    தகவல் தொழில்நுட்பத் துறையில் அண்மைக்காலமாக இலங்கை அடைந்துள்ள பெரு முன்னேற்றம் மிகவும் உயர்ந்த தன்மை கொண்டதாகும்.

    தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.

    இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே 28 இலட்சம் பேர்களாகும். அதில் ஒரு கோடி 28 இலட்சம் பேருக்கு செல்லிடத் தொலைபேசி உண்டு.

    வயர்களை இணைத்துள்ள தொலைபேசி 38 இலட்சம் பேருக்கு உள்ளது. ரெலிகொம் நிறுவனம் 1000 சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

    ஜனகலா கேந்திர நிலையத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

    -Thinakaran

     

     

     

 

 

 

Published by

Leave a comment