நேற்றி திங்கட்கிழமை ஒலிம்பிக் போட்டியின் 10வது நாள் நிகழ்ச்சிகள் வழமைபோல் இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்த லண்டன் ஒலிம்பிக் அரங்கு வீரர்களின் ஆனந்தத்தால் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த வீரர் ‘பெலிக்ஸ் சென்செஸ்’ ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக் இல் முதலாவது தங்கத்தை வென்றிருந்தார். நேற்று லண்டன் ஒலிம்பிக் அரங்கில் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டிகளின் போது இடம்பெற்ற இப்போட்டியில் தனது வெற்றியின் ஆனந்தத்தாலும் தனது நாட்டுக்கான 2012ல் முதலாவது தங்கத்தைப் பெற்றதை நினைத்தும் விருது வழங்கி முடியும் வரைக்கும் அழுதார்.
இவரது அழுகையைத் தாங்க முடியாத பல்லாயிரம் ஆதரவாளர்களும் அழுதனர். இவரது அழுகையால் நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த பலகோடி மக்களின் கண்களும் குளமாகின! தனது நாட்டு தேசியக்கீதம் இசைக்கப்படும்போதும் கூட அழுதார். இவரது தொடர் அழுகையைத் தாங்கமுடியாத பார்வையாளர்கள் தேசியக்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே இவருக்கு உற்சாகத்தையும் ஆதரவையும் வழங்கி சமாதானப் படுத்தினர். எனினும் அவரது ஆனந்தக்கண்ணீரையும் அழுகைகையும் நிறுத்த முடியாமல் போனது.
பற்பல சுவாரசியங்களால் இரசிகர்களை பல்கோணங்களில் மகிழ்வித்துச் செல்லும் மெய்வல்லுநர் போட்டிகள் விளையாட்டு இரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவை என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.
நேற்று நிறைவடைந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் 10வது நாள் நிறைவில் தொடர்ந்தும் சீனா 31 தங்கங்களுடன் 1வது இடத்தில் இருக்கின்றது. அமெரிக்கா 29 தங்கங்களுடன் 2வது இடத்தையும், பிரித்தாணியா 18 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் பெற்றிருக்கின்றது.
![article-2184634-146A7E9C000005DC-203_634x476[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/article-2184634-146a7e9c000005dc-203_634x47611.jpg?w=530&h=380)
Leave a comment