இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் 111ஐச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கான முதலாவது வினைத்திறன் காண் தடைப்பரீட்சை 2012 ஆகஸ்ட் 7ஆம் 8ஆம் 9ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும்.
இப்பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கு குறித்த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவனையும் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எப்.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
அந்த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவனையும் இது வரை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரிகள் தமது பெயர் முகவரிகளுடன் பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு – வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளையுடன் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் கேட்டுக் கொள்கிறார்.
தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி இலக்கம்: 011-2785230 011-277075
பெக்ஸ் இலக்கம்: 011-2784232
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment