அம்பாந்தோட்டைப் பிரதேசத்திலேயே சகல சாதனைகளும் நிகழ்த்தப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.எதேச்சதிகாரம், சோசலிசம், மாக்சியம் இந்த எந்த வாதமும் எமக்குத் தேவையில்லை.
நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஓர் ஆட்சி முறையே எமக்கு தேவைப்படுகின்றது.
ஊழல் இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமானது.
சிறிய வியாபாரமொன்றை ஆரம்பிக்க வேண்டுமானாலும் கப்பம் செலுத்த வேண்டியுள்ளது.
தங்காலை பிரதேசத்தில் நடைபெற்றும் வரும் சம்பவங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கப்பல் செல்லாத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம், விளையாடாத சர்வதேச விளையாட்டு மைதானம் போன்றன தங்காலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
தற்போது அந்தப் பிரதேசத்தில் பாரியளவில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த அனைத்து சாதனைகளும் அம்பாந்தோட்டைப் பிரதேசத்திலேயே பதிவாகின்றன என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-Tamilwin
Leave a comment