தேசியப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் தமிழ் தினசரி ஒன்றில் நேற்றைய தினம் அதன் முதற்பக்கத்தில் வெளியாகியிருந்த விளம்பரம் ஒன்று தமிழ் பேசும்மக்களது முகங்களைச் சுழிக்க வைத்ததுடன், பணம் சம்பாதிப்பதற்காக இப்படியுமா பிழைப்பு நடத்த வேண்டுமெனும் கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
சிறுபராயத்தினரும் பார்வையிடும் தேசிய பத்திரிகைளின் உட்பக்கங்களில் ஆபாச உணர்வுகளைத் தூண்டும் ‘மசாஜ் கிளப்” விளம்பரங்கள் பிரசுரமாவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்தித்துரையாடியபோது வருத்தம் தெரிவித்து ஒருவாரம் கூடச் செல்ல முன்னர் இப்பத்திரிகை தனது முதற் பக்கத்தில் சமூகப் பொறுப்பற்ற முறையில் இத்தகையதொரு விளம்பரத்தை பிரசிரித்துள்ளமை குறித்து பத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமிழர் உரிமைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசியத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்திருவரும் இப்பத்திரிகை தற் சமூகத்தை நலினப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வித்திடும் செயல்களிலும் ஈடுபட முனைந்துள்ளதாகவும் புத்திஜீவிகள் குற்றம் சாட்டினர்.
குறிப்பிட்ட விளம்பரம் மக்களது குறிப்பாக பெற்றோரது மனங்களைப் புண்படுத்தியுள்ள அதேவேளை இப்பத்திரிகை விற்பனை சொற்பமென்பதால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையெனவும், இதுபோன்ற பத்திரிகைகளை மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் தெரிவித்தனர்.
-தினகரன்
Leave a comment