சீனா மீண்டும் முதலிடம்: புகழ்பெற்ற வீரர்களான அண்டி முரே, உசேன் போல்ட் ஆகியோரும் அபார வெற்றி!

-MJ

‘லண்டன் ஒலிம்பிக்’ நேற்று (ஞாயிறு) இருந்தது போல் என்றும் இருந்ததில்லை. ஒலிம்பிக் அரங்கில் 80,000 இரசிகர்கள் நிறைந்திருந்தனர். இதேபோல் பிரித்தாணிய வீரர் அண்டி முரே விளையாடிய டென்னிஸ் மைதானத்திலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற லண்டன்-விம்பிள்டன் ஆன்களுக்கான ஒற்றையர் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் ஐ எதிர்த்து பிரித்தாணிய வீரர் அண்டி முரே இன்று இறுதிப்போட்டியில் சந்தித்தார். எதிர்பாராத விதமாக படுதோல்வியைச் சந்தித்த பெடரர், வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

பல்லாயிரக்கணக்கான பிரித்தாணியர்களின் ஆனந்தக் கண்ணீருக்கு மத்தயில் அண்டி முரே வெற்றி பெற்று, தங்கத்தை தனதாக்கிக் கொண்டார். இது ஒரு பிரித்தாணிய வீரர் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெறும் முதலாவது தங்கம் என்பதும் சரித்திரமாகும்.

இதேபோல் மெய்வல்லுநர்போட்டிகள் இரவு 9 மணிவரை லண்டன் ஒலிம்பிக் அரங்கை அலங்கரித்திருந்தன. ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார். மைதானத்தின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற உசைன் போல்ட் இரசிகர்களை தனது வெற்றியாலும், சாகசத்தாலும், குறும்புத்தனத்தாலும் மகிழ்வித்தார்.

9.3 செக்கன்களில் பெற்ற இவ்வெற்றியானது, ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதலாவது சாதனையாகவும், உலக வரலாற்றில் இரண்டாவது உலக சாதனையாகவும் பதிவாகி இருக்கின்றது. இதற்கு முன்னர் 2009ல் பேர்லினில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் உசைன் போல்ட் 9.58 செக்கன்களில் வெற்றி இலக்கை அடைந்து உலக சாதனையையும் படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு ஜமைக்கா, ட்ரிலாவ்ணி எனும் கிராமத்தில் பிறந்த உசைன் தற்பொழுது ஜமைக்கா கிங்ஸ்ட்டன் நகரத்தில் வசித்து வருகின்றார்.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கமும் நேற்றைய போட்டியில் 1 தங்கமும் பெற்று மொத்தமாக 4 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார். இவர் ஓர் முஸ்லிம் சமயத்தவரா? எனும் கேள்விகள் தற்பொழுது எழுந்தவண்ணமிருக்கின்றன. எனினும் இவர் ஓர் முஸ்லீம் அல்லர்.

நேற்று இரவு நிறைவடைந்த (05-08-2012) போட்டிகளின் அடிப்படையில் சீனா 30 தங்கங்களுடன் மொத்தமாக 61 பதக்கங்களுடன் முதலாவது இடத்தில் மீண்டும் முன்னேறி இருக்கின்றது.  அமெரிக்கா 28 தங்கங்களுடன் மொத்தமாக 60 பதக்கங்களுடனும், பிரித்தாணியா 16 தங்கப் பதக்கங்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றது.

நீயா-நானா? எனும் பலத்த போட்டியில் சீனா தற்பொழுது முன்னணியில் இருக்கின்றது. நேற்று இடம்பெற்ற முக்கிய மெய்வல்லுநர் போட்டிகளில் அமெரிக்கா எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்திருந்தால் இப்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Rank Country Gold Silver Bronze Total
1 China 30 17 14 61
2 United States 28 14 18 60
3 Great Britain & N. Ireland 16 11 10 37
4 South Korea 10 4 6 20
5 France 8 8 9 25

Published by

Leave a comment